குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றோம் - உதித் சூர்யாவின் தந்தை போலீசாரிடம் வாக்குமூலம்

குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றோம் - உதித் சூர்யாவின் தந்தை போலீசாரிடம் வாக்குமூலம்

மாணவர் உதித் சூர்யா

  • News18
  • Last Updated :
  • Share this:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைதாகியுள்ள உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் போலீசார் விசாரணையில் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக கைதான மாணவர் உதித் சூர்யா அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி அருகே கைது செய்யப்பட்ட இருவரிடமும் நேற்று தேனியில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவும், வெங்கடேசனும் ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த தரகர் மூலம் மும்பையைச் சேர்ந்த ஒருவரின் உதவியோடு ஆள் மாறாட்டம் செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு இருவரையும் அழைத்துச் சென்ற சிபிசிஐடி காவலர்கள் அங்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். பின்பு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் தேனி மாவட்டச் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்பு கல்லூரிக்கு சென்று முதல்வரின் அலுவலகம், மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இந்த நிலையில், திருப்பதியில் தலைமறைவாக இருக்கும் போது விஷ ஊசி போட்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதாக விசாரணையில் வெங்கடேசன், போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர், வெங்கடேசன் உடன் ஒன்றாக பணி புரிந்தவர் என்பதால், அவர் உதவியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Sankar
First published: