ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி: யூடியூபர் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி: யூடியூபர் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை காவல் ஆணையர்

சென்னை காவல் ஆணையர்

சென்னையில் தொடர்ச்சியாக ரவுடிகளின் பட்டியல் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாளை சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளதால், டாஸ்மாக் கடைகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணி அகியோர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்கு பின்னர் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், நாளையிலிருந்து சென்னையில் டாஸ்மாக் கடை திறக்க படுவதாகவும் அதற்காக ஒவ்வொரு இடத்திலும் பேரிகாடர்கள் வைத்து சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளர்கள் ஒழுங்குபடுத்தப்படுவார்கள் என்றும், மேலும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சென்னை காவல் எல்லைக்குள் மட்டும் 677 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும் டாஸ்மாக்கில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என ஒவ்வொரு கடையிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், நேற்று இரவு கைது செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் மீது சென்னையில் 55 வழக்குகள் இருப்பதாகவும் அவரை கைது செய்ய முயன்றபோது தப்பிக்க முயன்றதால் அவருக்கு அடிபட்டதாகவும் கூறிய காவல் ஆணையர், ரவுடி காக்காதோப்பு பாலாஜியிடமிருந்து ஒரு பட்டா கத்தியை பறிமுதல் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் தொடர்ச்சியாக ரவுடிகளின் பட்டியல் எடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஒரு வாரத்தில் மட்டும் 15 ரவுடிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் சென்னையில் முழுவதுமாக ரவுடிசம் அழிக்கப்படும் எனவும் காவல் ஆணையர் ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

குறிப்பாக யூடியூபர் மதன் மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்து கொண்டே இருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, யூடியூபர் மதன் மீதான புகார்கள் தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Ramprasath H
First published:

Tags: Chennai Police, Crime | குற்றச் செய்திகள், Police, Youtube, YouTuber Madan