Home /News /tamil-nadu /

தருமபுரம் ஆதினத்தை தோளில் சுமக்க நானே நேரில் செல்வேன் - அண்ணாமலை

தருமபுரம் ஆதினத்தை தோளில் சுமக்க நானே நேரில் செல்வேன் - அண்ணாமலை

தருமபுரம் ஆதினத்தை தோளில் சுமக்க நானே நேரில் செல்வேன் - அண்ணாமலை

தருமபுரம் ஆதினத்தை தோளில் சுமக்க நானே நேரில் செல்வேன் - அண்ணாமலை

BJP Annamalai | தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் சுமக்க தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் பட்டின பிரவேசம் தடையானது தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு எதிரானது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    தருமபுரம் ஆதினத்தில் நடக்க உள்ள பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார். பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பழக்கத்திற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆதினத்தை மனிதர்கள் சுமந்து செல்வதை ஏற்க முடியாது என அவர்கள் கூறியிருந்தனர். இந்த மாத இறுதியில் பட்டினப் பிரவேசம் நடக்க உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லக் கூடாது என மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

    பட்டின பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயிரரை கொடுத்தாவது தருமபுரம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதினம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். தருமபுரம் பட்டின பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். முதலமைச்சர் இதில் நல்ல முடிவை விரைவில் எடுப்பார். ஆதீனத்துடன் பேசி இரு சுமூகமான முடிவை அரசு எடுக்கும் என்று விளக்கமளித்தார்.

    Also Read : மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமனம்

    இந்நிலையில் தருமபுரம் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்துள்ளது தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு எதிரானது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்!



    இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜக இந்ந நிகழ்ச்சியை நடத்தி காட்ட தயாராக இருக்கிறது“ என்றும் பதிவிட்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Annamalai, BJP, DMK

    அடுத்த செய்தி