• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்துவிட்டோம்; ஏழு பேர் விடுதலையில் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்துவிட்டோம்; ஏழு பேர் விடுதலையில் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

  • Share this:
    ராஜுவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கொண்டு வந்த தீர்மானம் 'பூஜ்யம்' மதிப்பிளானது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ராஜுவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இந்தப் பரிந்துரை மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருக்கபட்டதால் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

    கடந்த முறை இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளுக்கு பிறகு நளினி சட்டப்பூர்வக் காவலில் இருக்கிறாரா அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா என தெளிவு படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், 7 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாலும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்தியதாலும் இவர்களின் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்க முடியாது என மீண்டும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் பரிந்துரை ஆளுனரிடம் நிலுவையில் உள்ளதால், சட்ட விரோத காவலில் இவர்கள் வைக்கப்பட்டதாக கருத முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

    மத்திய அரசு தரப்பில், 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை கடந்த 2018 ஆம் ஆண்டே மத்திய அரசு நிராகரித்து விட்டு அதனை தமிழக ஆளுநரிடம் தெரிவித்து விட்டதால், தமிழக அமைச்சரவைக் கொண்டு வந்த தீர்மானம் இனி செல்லாது எனவும் அது "பூஜ்யம்" மதிப்பிளானது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநில அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என வாதிட்டார். மேலும், தமிழக அரசை ஆளுநர் நடத்துகிறாரா அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையிம் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: