ஜனநாயகத்துக்கு எங்கு ஆபத்து வந்தாலும் தட்டிக் கேட்போம்! மு.க.ஸ்டாலின் ஆவேசம்

பெரியார் சொன்னது போல், எந்த போரட்டமானலும் வெற்றி பெற்றேமா ? தோல்வி அடைந்தேமா ? என்பது முக்கியமில்லை. போராடினோமா என்பது தான் முக்கியம்.

ஜனநாயகத்துக்கு எங்கு ஆபத்து வந்தாலும் தட்டிக் கேட்போம்! மு.க.ஸ்டாலின் ஆவேசம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: August 27, 2019, 10:57 PM IST
  • Share this:
ஜனநாயகத்துக்கு எங்கு ஆபத்து வந்தாலும் முதலில் தட்டிக்கேட்போம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்பில் சேலத்தில் பவளவிழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, முத்தரசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘தாய் கழகத்திற்கு வாழ்த்து கூற வந்துள்ளேன். நூறு ஆண்டுகள் போதாது. பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். பெரியாரின் வயது அதிகரிக்க அதிகரிக்க மேடையில் அதிகம் பேசினார். தி.மு.க தலைவராக பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதே நாளில் கருணாநிதியின் உருவச் சிலையை திறந்து வைத்துள்ளேன். என்ன பொருத்தம்.


இது, திட்டமிட்டு நடத்தப்படவில்லை. யதார்த்தமாக நடந்தது. திராவிட கழகத்தை யாராலும் அழிக்க முடியாது. திராவிட கழகம் முன்பை விட வேகமாக வளர்ந்து வருகிறது. ஜனநாயகத்திற்கு எந்த ஆபத்து வந்தாலும் எதிர்த்து நிற்போம். முறியடிப்போம். பெரியார் சொன்னது போல், எந்த போரட்டமானலும் வெற்றி பெற்றேமா ? தோல்வி அடைந்தேமா ? என்பது முக்கியமில்லை. போராடினோமா என்பது தான் முக்கியம். அதை தான் நாமும் செய்து வருகிறோம்.

இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே காஷ்மீர் அந்தஸ்து ரத்து, சிதம்பரம் கைது போன்ற நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

கடன் வாங்கிய பெரு முதலாளிகளைத் தப்ப விட்டவர்கள் தேசியவாதிகள்; கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகளா? சர்வாதிகாரத்தை எதிர்த்தால் தேசவிரோதிகளா? நாங்கள் ஜனநாயகத்தின் ஏஜெண்டுகள்.ஐனநாயகத்திற்கு எங்கு ஆபத்து வந்தாலும் முதலில் தட்டிக்கேட்போம். காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தை திசை திருப்புகின்றனர்.

நீட் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான அனைத்து திட்டங்களையும் மாநில அரசு அடிபணிந்து ஏற்கிறது. சட்டமன்ற இடைத் தேர்தலில் ஆட்சியில் உள்ள கட்சிகள் தான் வெற்றி பெற்று உள்ளது. அதை முறியடித்து நடந்து முடிந்து இடைத்தேர்தல் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம்’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

Also see:

First published: August 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading