ட்ரம்புக்கு மோடி பிரச்சாரம் செய்ததை தவறென்று அப்போதே சுட்டிக்காட்டினோம் - கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

ட்ரம்புக்கு மோடி பிரச்சாரம் செய்ததை தவறென்று அப்போதே சுட்டிக்காட்டினோம் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ’திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சின்னச் சின்ன கருத்து முரண்பாடுகள் இருக்கலாம் என்றும் அது அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயும் உள்ளதாகவும் கூறினார். மேலும், ஆட்சி மாற்றம், இந்தி எதிர்ப்பு, மதச்சார்பின்மை போன்ற பெரிய கொள்கை விஷயங்களில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.    அமெரிக்கத் தேர்தலில் பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி குறித்து பேசிய கார்த்தி சிதம்பரம், ஹவுடி மோடி, நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி சென்று ட்ரம்புக்கு பிரச்சாரம் செய்ததும், இன்னொரு நாட்டு அரசியலில் தலையிட்டதும் ராஜாங்க உறவிற்கு ஏற்புடையதல்ல என்று ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் அப்போதே சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.
    Published by:Rizwan
    First published: