• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து மக்கள் அறியும் வகையில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடன் வாங்கி கட்டாய செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதி நிலைமை சரிந்துவிட்டது. கொரோனா ஆரம்பிப்பதற்கு முன்பே வருமானம் சரிந்துவிட்டது.

    வருவாய் பற்றாக்குறை இப்படி இருப்பதால், நிதி பற்றாக்குறை கட்டாயம் அதிகரிக்கும். தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் கடனைச் செலுத்தும் தன்மை குறைந்ததால், வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது.

    Also read: அரசு பேருந்து ஒரு கி.மீ ஓடினால் தமிழக அரசுக்கு ரூ.59.15 நஷ்டம்: நிதியமைச்சர் பி.டி.ஆர்

    மேலும், சொத்து வரி, போக்குவரத்து வரியை அதிமுக உயர்த்தவில்லை? யாரிடம் வரியை வாங்குவது என்று அதிமுக அரசுக்கு தெரியவில்லை. தமிழகத்தில் புள்ளிவிவரங்களின்படி, 2 கோடியே 16 லட்சத்து 24,238 குடும்பங்கள் எனக் கொண்டால், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் உள்ளது. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2 மாதங்கள் கொரோனா 2வது அலை தடுப்பு பணியில் போய் விட்டது. மற்ற வெள்ளை அறிக்கைகளை விட கூடுதல் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. முந்தைய ஆட்சியில் பெறப்பட்ட கடனால் ஏற்பட்ட சிக்கல்களை விளக்கியுள்ளேன். இந்தியாவில் வேறேந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, வெள்ளை அறிக்கையில் புதிய விஷயங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதில் திமுக வெள்ளை அறிக்கை மூலம் மக்களை திசை திருப்புகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே வெள்ளை அறிக்கை ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதிமுக பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் திமுக உயர்த்த போவதாக சொல்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்களை வரிவிதிப்புக்கு தயார்படுத்துவதாக வெள்ளை அறிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: