Home /News /tamil-nadu /

காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும்: சென்னை மகளிர் நீதிமன்றம்

காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும்: சென்னை மகளிர் நீதிமன்றம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

காதலிக்க மறுக்கும் பெண்களின் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூரைச் சேர்ந்த அரவிந்த்குமார் என்ற இளைஞர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மன்னார்குடியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார்.  தன்னை காதலிக்க மறுத்த பெண்ணுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து  தகராறில் ஈடுபட்டதோடு அவரை கத்தியால் குத்தியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர், இந்த வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக் விசாரித்தார்.

    Also Read:  செல்ஃபி எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி.. குடும்பத்தாரின் கண்முன்னே நிகழ்ந்த சோகம்

    அரவிந்த்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும்  10,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.  இதுபோன்ற சம்பவங்கள் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களது முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்தும் என கூறிய அவர்,  இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது எனவும், இவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

     

     

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Crime News, Love issue, Tamilnadu, Woman

    அடுத்த செய்தி