ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுகவை விரட்டியடிப்போம் என்று தீர்மானம் போட எங்களுக்கு வெகு நேரம் ஆகாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

திமுகவை விரட்டியடிப்போம் என்று தீர்மானம் போட எங்களுக்கு வெகு நேரம் ஆகாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

அமைச்சர் கடம்பூர் ராஜு.

அமைச்சர் கடம்பூர் ராஜு.

கிராமங்களில் திமுகவை விரட்டியடிப்போம் என்று தீர்மானம் போட எங்களுக்கு வெகு நேரம் ஆகாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட லெட்சுமி மில் காலனியில் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கிருஷ்ணா நகரில் 32 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் வேட்பாளர் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்காமல் சென்றது குறித்து கேட்கப்பட்டது. அப்போது, அவருடைய மௌனம் சம்மதம் என்று அர்த்தம் என்று கூறிய அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று கூறி தேர்தலைச் சந்தித்து வருகிறோம். ஏற்கனவே பிரதமராக இருந்த மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி நாடாளுமன்ற தேர்தலை பாஜக சந்தித்தது போல தற்பொழுது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்ற இலக்குடன் தேர்தலைச் சந்திக்கிறோம் என்றார்.

Also read: பயோமெட்ரிக் பிரச்னையைத் தீர்த்து, பொங்கல் பரிசை விரைந்து வழங்குக - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

தொடர்ந்து பேசுகையில், முதல்வர் வேட்பாளர் யார் என்று நாங்கள் அறிவித்த பின்னர் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்தனர். அதை அமித்ஷாவும் ஏற்றுக்கொண்டார். இங்குள்ள பாஜக தலைவர்கள் சொல்லும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

மக்கள் நலனில் திமுகவிற்கு அக்கறை இருந்தால் தமிழகம் முழுவதும் முதல்வர் மேற்கொண்ட கொரோனா ஆய்வு பணியில் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்று கூறிய கடம்பூர் ராஜு, திமுக போன்று அனைத்து கட்சிகளும் கிராம சபை கூட்டம் நடத்தினால் கிராமங்களில் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றும் கிராம சபை என்ற பெயரில் அதிமுகவை புறக்கணிக்கறோம் என்று திமுக தீர்மானம் போடுவது போன்று திமுகவை விரட்டியடிப்போம் என்று தீர்மானம் போட வெகு நேரம் ஆகாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து தேமுதிக அங்கம் வகிக்கும் அணிதான் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியது தொடர்பாக அமைச்சரிடம் கேட்டதற்கு, கட்சி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்காக சொல்லி இருக்கலாம். தேர்தலின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் இயற்கையாக சொல்லக்கூடிய ஒன்றுதான் என்றார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Rizwan
First published:

Tags: Minister kadambur raju