சின்னத்தம்பி யானையை முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை - வனத்துறை

சின்னதம்பி யானை மிகவும் சாதுவாக மாறியதால் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமம் என்று நிபுணர் அஜய் தேசாஜி அறிக்கை அளித்தார்

news18
Updated: February 11, 2019, 7:43 PM IST
சின்னத்தம்பி யானையை முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை - வனத்துறை
சின்னத்தம்பி
news18
Updated: February 11, 2019, 7:43 PM IST
சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என தமிழக வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றத் தடைகோரிய வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரனை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘பத்திரிக்கை செய்திகளை பார்க்கும் போது சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களாக காட்டு யானை போல் செயல்படவில்லை. அதே சமயம் சின்னத்தம்பி யானையால் பயிர்களுக்கு பாதிப்பும், பொதுமக்களுக்கு அச்சுருத்தலும் இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் சின்னத்தம்பி யானை மிகவும் சாதுவாக மாறியதால் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமம் என்று நிபுணர் அஜய் தேசாஜி அறிக்கை அளித்தார்.

‘சின்னத்தம்பி யானையை காட்டுக்குள் விரட்டுவதில் சிரமம். சாதுவாக மாறிய சின்னத்தம்பி யானையை காட்டுக்குள் விரட்டினாலும் ஊருக்குள் திரும்பிவிடுகிறது. சின்னத்தம்பி யானையைப் பிடித்து முகாமில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அஜய் தேசாஜி அறிக்கையின் படி சின்னத்தம்பி யானையை முகாமில் பராமரிக்க முடிவு’ என்று உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில் அளித்தது.

இதையடுத்து சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றத் தடைகோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also watch

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...