Home /News /tamil-nadu /

தமிழக கோயில்களில் பராமரிக்கப்படும் அசாம் யானைகளை திருப்பி அனுப்ப போவதில்லை - தமிழக அரசு திட்டவட்டம்

தமிழக கோயில்களில் பராமரிக்கப்படும் அசாம் யானைகளை திருப்பி அனுப்ப போவதில்லை - தமிழக அரசு திட்டவட்டம்

யானை

யானை

அசாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்டு தமிழக கோவில்களில் பராமரிக்கப்படும் 9 யானைகளையும் திருப்பி அனுப்பப் போவதில்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    அசாம் யானைகளை திருப்பி அனுப்ப போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    அசாம் மாநிலத்திலிருந்து 9 யானைகள் பெறப்பட்டு தமிழக கோயில்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை துன்புறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி பரவியது.  விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான PETA  இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. யானை 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோயிலில் இருப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

    யானை விவகாரம் அசாம் மாநிலத்தின் பல்வேறு ஊடகங்களிலும் பரபரப்பு செய்தியாக பதிவான நிலையில், அம்மாநிலத்தின் தலைமை வன பாதுகாப்பு அலுவலர் பாதிக்கப்பட்ட யானையை சட்ட ரீதியாக நீதிமன்றம் மூலம் அனுகி அசாமிற்கு கொண்டு வரும் முயற்சி எடுக்கப்படும் என்றார்.அந்த வீடியோ காட்சியின் அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்கிய யானைகளை திரும்பப்பெற அசாம் அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

    Also Read:  கணவரின் ஆசைக்காக திருநங்கையை திருமணம் செய்து வைத்த மனைவி - வியப்பில் நெட்டிசன்கள்.!

    இந்நிலையில் யானைகளை திருப்பி அனுப்ப தடை கோரி மயிலாடுதுறையை சேர்ந்த சிவகணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் யானைகளை முறையாக பராமரிப்பதாக தமிழக அரசு உத்தரவாதம் கொடுத்தது. மேலும் 9 யானைகளையும் திருப்பி அனுப்பப்போவதில்லை என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது அரசின் உத்தரவாதத்தை ஏற்று வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai High court, Elephant, Elephant struggles, Tamil News

    அடுத்த செய்தி