திமுகவுக்கு தான் ஆலோசகர் தேவை, அதிமுகவுக்கு மக்களே ஆலோசகர்கள் - அமைச்சர் செல்லூர் ராஜு

திமுக போன்ற பல கோடி ரூபாய் கொடுத்து ஆலோசகர் அமைக்க வேண்டியதில்லை என்றும் அதிமுகவிற்கு மக்களே ஆலோசகர்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

திமுகவுக்கு தான் ஆலோசகர் தேவை, அதிமுகவுக்கு மக்களே ஆலோசகர்கள் - அமைச்சர் செல்லூர் ராஜு
அமைச்சர் செல்லூர் ராஜு.
  • Share this:
மதுரையில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்  அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது. பாசறை செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பரமசிவம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது,

திமுகவை போல் அல்லாமல், அதிமுக ஜனநாயக கட்சி. கிளைச் செயலாளர் கூட துணை முதல்வராகும் வாய்ப்பு அதிமுகவில் உள்ளது. திமுகவில் அதுபோல கிடையாது. ஸ்டாலின் மகனோ மகளோ கட்சிக்குள் வர மாட்டார்கள் எனக் கூறிவிட்டு தற்போது கட்சிக்குள்ளேயே மிகப்பெரிய பூசல் உள்ளது.


திமுகவுக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஆலோசனை சொல்ல ஆள் உள்ளது. ஆனால் அதிமுகவுக்கு மக்கள் ஆலோசனை சொல்ல உள்ளார்கள் என்றார்.

Also read: ஆயுஷ் பயிற்சியின் போது, இந்தியை திணித்து தமிழக மருத்துவர்களை அவமதிப்பதா?: ராமதாஸ் கண்டனம்

முன்னதாக அமைச்சர் வருகைக்காக கூட்டம் நடந்த பகுதி முழுவதும் கொடிகள் கட்டப்பட்டு, மைக் செட் அமைக்கப்பட்டு, பட்டாசு வெடித்து கோலாகலமான வரவேற்பு செய்யப்பட்டிருந்தது. சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
First published: August 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading