• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA விவகாரம்: எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார் - வைகோ காட்டம்

CAA விவகாரம்: எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார் - வைகோ காட்டம்

வைகோ

வைகோ

  • Share this:
    குடியுரிமை திருத்தச் சட்டத்தை எந்த காரணத்தை கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என்று பிரதமர் மோடி பேசுகிறார். எரிமலையின் ஓரத்தில் உட்கார்ந்து மகுடி வசித்து கொண்டு இருக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று 2,05,000 கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்கினோம்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை எந்தக் காரணத்தை கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என்று பிரதமர் மோடி பேசுகிறார். எரிமலையின் ஓரத்தில் உட்கார்ந்து மகுடி வாசித்து கொண்டு இருக்கிறார். எரிமலை எப்போது வெடிக்கும் என்று தெரியாது என கூறினார்.

    மேலும் பேசிய அவர், சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கட்டுபாட்டுடன் நடந்து கொண்டனர். சாலையில் கிடந்த பொருட்களையும் அப்புறப்படுத்திவிட்டு சென்றனர்.

    மக்கள் மனதில் இஸ்லாமிய மக்களின் கோரிக்கை நியாயமானது என்று ஏற்பட்டு உள்ளது. பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் ஒரு ரத்த களரியை உருவாக்கி இந்து, முஸ்லீம்களை பிரித்து கொண்டு வர இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. அதுபோல் ஒருகாலமும் நடக்காது.

    இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், சீக்கியர்கள் என எல்லா தரப்பினரும் இஸ்லாமியர்களுடன் சகோதர்களாக தான் இருப்பார்கள். தமிழக வரலாற்றில் நடக்காத ஒரு போராட்டத்தை நடத்தி உள்ளதாக கூறினார்.

    Also see:


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: