• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கூட்டணிக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை - உதயநிதி ஸ்டாலின்

கூட்டணிக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் இன்னும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தாலும், கூட்டணிக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை எழும்பூரில் ஆயிரம் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘எடப்பாடி அரசு மீதும் மோடி அரசின் மீது உள்ள வெறுப்பு மட்டுமல்ல, திமுக தலைவர் ஸ்டாலின் மீதான ஆதரவு அலை காரணமாகவே திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

    மாணவர்களுக்கு தன்னுடைய கையால் நலத்திட்ட உதவிகள் வழங்கியது மிகப்பெரிய பாக்கியம். தமிழக அரசு மழை வேண்டி யாகம் வளர்ப்பதற்கு பதிலாக மரம் வளர்ப்பது நல்லது.

    இன்னும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தாலும் கூட்டணிக்கு எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை’’ என்று பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ilavarasan M
    First published: