திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, ஆளுநர் மாளிகையில் சந்தித்து, அதிமுக அரசின் ஊழல் பற்றிய ஆதாரங்களை கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு செய்துள்ள ஊழல் தொடர்பான ஆதாரங்களை ஆளுநரிடம் கொடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு கேட்டுக் கொண்டதாக கூறினார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்ததாகவும் அப்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவருடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் , அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.
அதில், தமிழகத்தில் உள்ள சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் கணிசமாக உயர்வு; கொரோனோ காலத்தில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது; 40 தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொறியியல் கட்டணம் உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.85 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது இந்த கட்டணம் 1 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக ஓய்வுபெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு கட்டண நிர்ணயம் செய்து கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவகாரங்கள் இதில் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Governor Banwarilal purohit, MK Stalin, TN Assembly Election 2021