Home /News /tamil-nadu /

தேசிய கல்விக் கொள்கையை படித்து புரிந்து கொண்ட பின்னரே கருத்து தெரிவிக்கிறோம்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

தேசிய கல்விக் கொள்கையை படித்து புரிந்து கொண்ட பின்னரே கருத்து தெரிவிக்கிறோம்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

தேசிய கல்விக் கொள்கையை படித்து புரிந்து கொண்ட பின்னரே கருத்து தெரிவிக்கிறோம்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

தேசிய கல்விக் கொள்கையை படித்து புரிந்து கொண்ட பின்னரே கருத்து தெரிவிக்கிறோம்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது படி, 3, 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் இடைநிற்றல் அதிகரித்துவிடும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    தேசிய கல்விக் கொள்கையை படித்து புரிந்து கொண்ட பின்னரே கருத்துகளை தெரிவிப்பதாக ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.

    தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கல்விக் கொள்கையை சிலர் சரியாக படிக்கவில்லை என்று விமர்சித்தார். அதில் உள்ள நல்ல அம்சங்களை நன்றாக புரிந்து கொள்ளாத யாரோ சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அமைச்சர் பொன்முடியை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

    ஒருவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் படிப்பை தொடருவதற்கு தேசிய கல்வி கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் கல்வி கொள்கையை படித்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனை செயல்படுத்த முடியுமா? பிரச்னை இருந்தால் அதற்கு எப்படி தீர்வு காணலாம் என்பதை பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


    இந்நிலையில் நேற்று சென்னை நந்தனம் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ஆளுநரின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நன்றாக படித்து புரிந்து கொண்ட பின்னரே தமிழ் நாடு அரசு தனது கருத்துக்களை பதிவு செய்வதாக கூறினார்.

    தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது படி, 3, 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் இடைநிற்றல் அதிகரித்துவிடும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளிலும் வெளிநாட்டு மாணவர்கள் தமிழ் நாட்டிலும் உயர் கல்வி பயிலும் வகையில், அரசு நடவடிக்கைகைள் மேற்கொண்டு வருவதாவும் பொன்முடி கூறினார்.

    மாணவர்களின் உயர்கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் தமிழ் நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆளுநர் முழு ஒத்துழைப்பு அளிப்பார் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Minister Ponmudi, RN Ravi

    அடுத்த செய்தி