சி.வி.சண்முகம் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. இந்தியா முழுவதும் 300-க்கு மேல சீட் வாங்கியிருக்கோம் - ராகவன் பதிலடி

ராகவன் - சி.வி.சண்முகம்

அதிமுக தொடர்ந்து நான்கு ஆண்டுகால ஆட்சியில் இருந்ததற்கு மத்திய அரசுதான் காரணம் என மக்கள் கூறுவதாக ராகவன் தெரிவித்தார்.

  • Share this:
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிறுபான்மையினர் வாக்கை பெற்றுதான் பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளது என பாஜக பொதுச்செயலாளர் ராகவன் கூறியுள்ளார்.

திண்டிவனத்தில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் பாஜக கூட்டணிதான். இதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிட்டோம்.சிறுபான்மையின மக்களுக்கு நம்முடம் கோபம் இல்லை. கொள்கை ரீதியாக அவர்கள் பாஜகவோடு முரண்பட்டு இருந்தார்கள். கொள்கை ரீதியாக அவர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டது.” எனப் பேசியிருந்தார்.

Also Read: அ.தி.மு.க தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க கூட்டணிதான் காரணம் - சி.வி.சண்முகம் நிர்வாகிகளிடம் குமுறல்

சி.வி. சண்முகத்தின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக பொதுச்செயலாளர் ராகவன் , “தேர்தல் தோல்விக்கான காரணம் பா.ஜ.க என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை அறிந்தேன். ஆனால் அந்த கருத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அல்லது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறியிருந்தால் பா.ஜ.க அதற்கு நிச்சயம் பதில் அளிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் சிறுபான்மையினர் உடைய வாக்குகள் பெற்று தான் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே சி.வி.சண்முகம் அவர்கள் தெரிவிக்கும் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பா.ஜ.க -  அ.தி.மு.க கூட்டணிக்கான தோல்வி காரணம் என்பது தமிழக அரசின் செயல்பாடு அவர்கள் கொண்ட கொள்கை இதுபோன்ற காரணங்களாக இருக்கலாம். அதை ஆராய்ந்து அடுத்த தேர்தலில் சரி செய்ய வேண்டியது எவ்வாறு என கண்டறிய வேண்டும்

தங்கள் கூட்டணி தொடர்கிறது என்று ஏற்கனவே பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்.தொடர்ந்து நான்கு ஆண்டுகால ஆட்சியில் இருந்ததற்கு மத்திய அரசுதான் காரணம் என மக்கள் கூறுகின்றனர். சட்டமன்ற தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: