தமிழகத்தில் ஆட்சி அமைக்கவே வேலை செய்து வருகிறோம் - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தான் நாங்கள் அனைவரும் வேலை செய்து வருகிறோம் என்று பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

  • Share this:
கடந்த வாரம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நியூஸ்18-க்கு அவர் அளித்த பேட்டியில், தமிழக பாஜகவின் வளர்ச்சிக்காகவே தன்னை நியமித்துள்ளதாகவும், தமிழக பாஜக நிச்சயம் வளர்ச்சி அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், முதலில் சட்டமன்றத்திற்குள் எங்கள் எம்எல்ஏக்கள் அமரவேண்டும்; தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் அனைவரும் வேலை செய்து வருகிறோம்.


அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்கான வேலைகளை நாங்கள் செய்து வருகிறோம் என்றார்.
Published by:Rizwan
First published: