Home /News /tamil-nadu /

நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி.. இதை திரும்ப திரும்ப கூறுவதில் எங்களுக்கே கூச்சமாக உள்ளது.. அன்புமணி ராமதாஸ்

நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி.. இதை திரும்ப திரும்ப கூறுவதில் எங்களுக்கே கூச்சமாக உள்ளது.. அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

"எண்ணிக்கை அடிப்படையில் தான் அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. மற்றபடி, பாமக தான் உண்மையான எதிர்க்கட்சி" என்று திருச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி, இதை திரும்ப திரும்ப கூறுவதில் எங்களுக்கே கூச்சமாக உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உடன் படித்த பள்ளித்தோழர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி வருகைதந்த பாமகவின் புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியபோது, "பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் சென்றுவிட்டால் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது. அது சமூக நீதிக்கே எதிரானதாக அமையும்.

எனவே பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். திருச்சி 'பெல்' நிறுவனம் என்பது திருச்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் நிறுவனம்.

எந்த வகையிலும் பெல் நிறுவனத்தை தனியார் மயமாக்ககூடாது. அப்படி தனியார்மயமாக்கப்பட்டால், கேரள அரசை போல, தமிழக அரசே அதன், 49 சதவீத பங்குகளை வாங்கி, பெல் நிறுவனத்தை ஏற்க வேண்டும்.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவின் திட்ட அறிக்கையை விவாதிக்கப்பட உள்ளது.

இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க எந்த அதிகாரமும் இல்லை.

இதை படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டம்

காவிரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பு, எவ்வளவு  நீர் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே. அணை கட்டுவதை பற்றிப்பேச அதிகாரம் இல்லை. எனவே, இதில் தமிழக அரசு தலையிட்டு, இந்த கூட்டம் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இல்லையென்றால்  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டு, நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எதிர்க்கட்சி கூச்சம்? 

அ.தி.மு.க சட்டசபையில் எண்ணிக்கை அடிப்படையில் தான் எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை பேசி, அதை நிறைவேற்ற வைப்பது தான் எதிர்கட்சியின் வெற்றியாக உள்ளது.

அந்தவகையில் நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி. இதை திரும்ப திரும்ப கூறுவதில் எங்களுக்கே கூச்சமாக உள்ளது" என்றார்.

"சனாதன தர்மம் குறித்த ஆளுநரின் பேச்சு குறித்த கேள்விக்கு, "பழையது குறித்து பேச வேண்டாம். நாட்டில் தற்போது மக்களுக்கு தேவை கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை தான் அது குறித்து தான் பேச வேண்டுமே தவிர. 2,000, 3,000 ஆண்டுகள் பழமையானது குறித்து பேசினால் எந்த பயனும் இல்லை" என்றார்.
Published by:Esakki Raja
First published:

Tags: ADMK, Anbumani ramadoss, DMK, PMK

அடுத்த செய்தி