Home /News /tamil-nadu /

பாமகவை மறு சீரமைத்து வருகிறோம்.. நிர்வாகிகளுக்கு பயிற்சி கொடுக்க திட்டம்.. அன்புமணி ராமதாஸ்

பாமகவை மறு சீரமைத்து வருகிறோம்.. நிர்வாகிகளுக்கு பயிற்சி கொடுக்க திட்டம்.. அன்புமணி ராமதாஸ்

பாமகவை மறு சீரமைத்து வருகிறோம்.. அன்புணி ராமதாஸ்

பாமகவை மறு சீரமைத்து வருகிறோம்.. அன்புணி ராமதாஸ்

பா.ம.க தலைவராக பொறுப்பேற்றதும் பா.ம.க 2.0 திட்டத்தை மக்களிடத்தில் பரவலாக்க பல திட்டம் செயல்படுத்தி வருகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

    மது மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை ஒழித்தாலே கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்துவிடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸூடன்  நியூஸ்18 செய்தியாளர் அன்பரசன் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...

    பாமக கட்சியை மறு சீரமைத்து வருகிறோம். பாமகவில் 90% பதவிகளில் இளைஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாமக நிர்வாகிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படும். மாவட்டம், கிராமம் வாரியாக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளேன்.

    மதுவால் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் அதிகரித்துள்ளது. மது ஒழிப்பை திமுக அரசு அமல்படுத்தாதது ஏன்? சட்டம் - ஒழுங்கு காவல்துறை கையைவிட்டு செல்லக் கூடாது. கூலிப் படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு பயம் வர வேண்டும்.

    பா.ம.க தலைவராக பொறுப்பேற்றதும் பா.ம.க 2.0 திட்டத்தை மக்களிடத்தில் பரவலாக்க பல திட்டம் செயல்படுத்தி வருகிறேன். மக்களை ஒன்றிணைப்பது, இளைஞர்களை ஒன்றிணைப்பது, மக்களை நேரடியாக சந்திப்பது, சமூக வலைதளங்கள் மூலம் கட்சியின் கொள்கைகள் மக்களிடையே சேர்க்கப்பட்டு வருகிறது.



    யார் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம்; ஆனால் அதற்குறிய ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆதாரம் மற்றும் புள்ளிவிவரத்தோடு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட வேண்டும்.

    குற்றம் உறுதி செய்யப்பட்டால் அமைச்சர் என்றாலும் யார் என்றாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக்கப்பட வேண்டும். அதிக அளவில் கொலைகள் நடந்து வருகிறது. இதற்கு காரணம் போதை. தேர்தல் வாக்குறுயில் திமுக சொன்ன மதுவை ஒழிக்க வேண்டும். மதுவை ஒழித்தால் குற்றங்கள் குறையும். அப்போது தான் சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கட்டுக்குள் வரும்.

    கடந்த வாரம் பா.ம.க தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் தற்போதைய தமிழக முதல்வரான ஸ்டாலினை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்.

    அவரை சந்திக்கும்போது மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைத்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Anbumani ramadoss

    அடுத்த செய்தி