• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கடுமையாக எதிர்க்கிறோம்- மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கடுமையாக எதிர்க்கிறோம்- மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    காவிரி டெல்டா பகுதியில், ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளை மத்திய அரசு அமைக்கக் கூடாது என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், வேளாண் மண்டலத்திற்கான சட்ட நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாகவும், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

    காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஞாயிறு அன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினர்

    இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டது என்னவென்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், சுற்றுச்சூழல் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் வழங்கிய கடிதத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.

    அதில். ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதியும் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்கவும் தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்தோடு, டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதியில், இதுபோன்ற ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளையும் தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.

    அதில், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மூலம், டெல்டாவில் நான்காயிரத்து 266 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும், 25 ஆண்டுகக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர், நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இதனால் டெல்டா மண்டலத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துபோகும் எனவும், கடல்நீர் உட்புகும் அபாயம் இருப்பதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

    667 கிலோமீட்டருக்கு பைப்லைன் போடப்படுவதும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும், மீத்தேன் வாயு எடுக்கப்படுவதால் காற்று மாசு ஏற்படும் எனவும், பெரும் விபத்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது

    இதனால் எதிர்காலத்தில் டெல்டா மண்டலத்தில், ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளை மத்திய அரசு அமைக்கக் கூடாது எனவும், இதுதொடர்பாக மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்ட அறிவிக்கையைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்குவதற்கான சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும், அதற்கான முழு ஆதரவையும் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: