முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'நாங்கள் மதம் சார்ந்த அரசியல் செய்யவில்லை' - பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன்

'நாங்கள் மதம் சார்ந்த அரசியல் செய்யவில்லை' - பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன்

கே.டி.ராகவன்

கே.டி.ராகவன்

நாங்கள் மதம் சார்ந்த அரசியல் செய்யவில்லை என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் கூறியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுப்படுத்துகிற உள்நோக்கம் கொண்ட யாத்திரைகளை தமிழகம் அனுமதிக்காது என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' தெரிவித்துள்ளது. மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்களே தவிர, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை திராவிட தொட்டிலான தமிழக மக்கள் நிரூப்பித்திருக்கிறார்கள் என்றும் அதில் குறிப்பிட்டது.

இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியளிக்காதது குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் கூறுகையில், அதிமுக ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகக் கூறியுள்ளார். அதிமுகவிற்கும் திமுகவிற்கும் உள்ள உடன்படிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், வேல் யாத்திரைக்கு மட்டும் அனுமதி வழங்காமல் மற்ற அனைத்து போராட்டங்களுக்கும் அதிமுக அரசு அனுமதி வழங்குவது ஏன் என்றும் கேட்டுள்ளார்.

Also read: தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும் - ராமதாஸ்

அவர் மேலும் கூறுகையில், பாஜக மதத்தைச் சார்ந்து அரசியல் செய்வதாக அதிமுக குற்றம்சாட்டுவது பழைய பாணி. கிறிஸ்துவ மக்கள் அதிகம் இருக்கக்கூடிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. நாங்கள் மதம் சார்ந்து அரசியல் செய்யவில்லை என்று பலமுறை நிரூபித்துள்ளோம் என்றார்.

வேல் யாத்திரைக்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய கே.டி. ராகவன், உரசல்கள் இல்லாமல்தான் கூட்டணியைக் கொண்டு செல்லவேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அது அதிமுக கையில்தான் உள்ளது என்று கூறினார்.

First published:

Tags: BJP, Vel Yatra