ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’திமுக தனித்து நின்றால் வெற்றி பெறும்..’ - ஐ.பெரியசாமியின் பேச்சுக்கு திருமாவளவன் பதில்!

’திமுக தனித்து நின்றால் வெற்றி பெறும்..’ - ஐ.பெரியசாமியின் பேச்சுக்கு திருமாவளவன் பதில்!

ஐ பெரியசாமி - திருமாவளவன்

ஐ பெரியசாமி - திருமாவளவன்

நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.. இந்துக்களை சுரண்டும் சங் பரிவார்களுக்கு எதிரானவர்கள் என்று திருமாவளவன் விளக்கம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  தான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; இந்துக்களை சுரண்டும் சங்பரிவார் அமைப்புகளுக்கே எதிரானவன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

  திருவள்ளூர் நகராட்சிக்கு எதிரில் லினன் லேண்ட் என்ற தனியார் துணிக்கடையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று ரிப்பன் வெட்டி  குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை. தொடங்கி வைத்தார். விசிக தலைவர் தொல். திருமாவளவன் திருவள்ளூர் வருகைக்கு கட்சியினர் பேனர்கள் வைத்து  உற்சாக வரவேற்பை அளித்தனர். திருவள்ளூர் மகா புத்த போதி மிஷின் புத்த பிட்சு பிரகாஷ் உள்ளிட்ட கட்சியினருடன் கடை திறப்பு விழாவில் பங்கேற்றார்.

  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இரண்டாவது முறையாக திமுக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டர். தேசிய அளவில் ஒருமித்த கருத்துள்ளவர்களை திரட்டி திமுக வழிநடத்த வேண்டும் என்று தனது ஆவலை வெளிப்படுத்தினார். மேலும் வருகிற அக்டோபர் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்று தமிழகத்திற்கு அரணாக இருக்கிறோம் என்பதை அனைவரும் வெளி காட்ட வேண்டும் என்றும் வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  இதையும் படிக்க : அரசியலையும் ஆன்மிகத்தையும் இணைத்து பார்க்காத மக்களால் பாஜக திணறுகிறது - மு.க. ஸ்டாலின்!

  இந்திய அரசியலில் மூன்றாவது அணி கூடாது என்ற தனது கருத்தை பிஆர்எஸ் தலைவரிடம்தான் வலியுறுத்தி உள்ளதாகவும் காங்கிரஸ் தலைமைக்கு யார் வருவது என்பது அந்த கட்சியினர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்த அவர், விடுதலை புலிகள் போரில் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை சிங்கள அரசு வெளியிட வேண்டும் என்றும் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதற்கு தனது வரவேற்பை தெரிவித்தார்.

  தனித்து போட்டியிட்டால் திமுக வெற்றி பெறும் என்று திமுக அமைச்சர் பெரியசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ’திமுக வலுவாக இருப்பதை வைத்து அவர் பேசியதாகவும் மக்கள் செல்வாக்கு பெற்று திமுக இருப்பதால் அவ்வாறு பேசியிருக்கலாம்’ என்றார்.

  மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்துக்களுக்கு எதிரானது அல்ல உழைக்கின்ற இந்துக்களை மதிக்கின்ற கட்சி என்றும் இந்துக்களை சுரண்டும் சங்பரிவார் போன்ற இந்து அமைப்புகளைத்தான் தொடர்ந்து எதிர்ப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். இயக்குனர் பேரரசு பழமைகளை பின்பற்றுவதை விட்டுவிட்டு 2022 புதுயுகத்திற்கு வர வேண்டும் என்றும் சங்பரிவார் அமைப்பு சூழ்ச்சிக்கு இறையாகி அவர்களிடம் விலை போய்விட்ட அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் தொடர்ந்து பேசி வருவதாகவும் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: DMK, DMK party, Thirumavalavan, VCK