'நோட்டு வலை வீசி ஓட்டு வாங்கும் காலம் இது' என்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து நடிகர் டி.ராஜேந்தர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னை தியாகராயநகரில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டி.ராஜேந்தர் கூறியதாவது-
நாட்டில் இருக்கும் சூழ்நிலையை பார்க்கும் போது பல பேர் ஓட்டு போட வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்/ சில பேர் ஓட்டு போட வேண்டும் என்று நினைத்தாலும் கூட, நோட்டாவிற்கு போட்டுச் செல்கின்றனர். மக்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
நாடாளுமன்ற தேர்தல் என்பது ஒரு மரத்திற்கு இருக்கக்கூடிய ஆணிவேர் போன்றது. சட்டமன்ற தேர்தல் என்பது சரி, சல்லிவேரைப் போன்றது. இந்த ஆணிவேர், சல்லி வேர் இருந்தால் மட்டுமே மரம் ஆகாது. அதற்குமேல் கிளை, இலை, பூ, காய், கனி வேண்டும். அவையாக இந்த உள்ளாட்சி மன்ற தேர்தல் அமையும்.
இதையும் படிங்க - ஜெயலலிதா இல்லாமல் முதல்முறையாக வாக்களிக்கிறேன்.. சசிகலா உருக்கம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் சரியாக இருந்தால் மட்டும்தான் மக்கள் பணி நடக்கும். நாட்டில் பணி நடக்கும். நலத்திட்டங்கள் நடக்கும். மக்கள் அப்போது தான் வாழ முடியும். அந்த காலத்தில் தங்கள் பகுதியில் என்ன ஒரு மக்கள் பிரச்சினை நடந்தாலும் கூட, அதை கவுன்சிலர்களிடம் தான் முதலில் சொல்வார்கள். அவர்களும் தீர்த்து வைப்பவர்களாக இருந்தனர்.
இதையும் படிங்க - அமைச்சர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? உதயநிதி ஸ்டாலின் பதில்
அந்த காலத்தில் கவுன்சிலர்கள் தியாகம் செய்தனர். கஷ்டப்பட்டனர். உழைத்தார்கள். ஊருக்கு உழைப்பவர்களாக இருந்தனர். அவர்கள் யார் என்று தேர்வு செய்து மக்கள் ஓட்டு போட்டார்கள் அல்லவா, அதுதான் மக்களாட்சி. அப்படித்தான் கிடைத்தது நல்லாட்சி. அதுதான் மக்களாட்சி.
உள்ளாட்சி தேர்தலில் கொள்கை பேசி ஓட்டு வாங்கியது அந்தக்காலம். நோட்டு வலைவீசி ஓட்டு வாங்குவது இந்தக்காலம். எந்த கட்சியிலாவது பேச்சாளர்களுக்கு மரியாதை இருக்கிறதா? எந்த கட்சியாவது கொள்கையை எடுத்துச் சொல்கிறார்களா?துண்டுபோட்டு தொண்டு செய்தது அந்தக் காலம். துட்டு போட்டு துட்டு எடுக்குற அரசியல் பண்றது இந்தக் காலம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local Body Election 2022