காமராஜர் பிறந்தநாளை கொரோனா விழிப்புணர்வு நாளாக கொண்டாட உள்ளோம்: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

விலைவாசி உயர்வை மத்திய மாநில அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென தமாகா வலியுறுத்தி வருகிறது என்றும். தொடர்ந்து கொரோனா இறப்புச்சான்றிதழ் முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

  • Share this:
    காமராஜர் பிறந்தநாளை கொரோனா விழிப்புணர்வு நாளாக கொண்டாட உள்ளோம் என  ஜி.கே.வாசன்

    தமிழ் மாநில காங்கிரஸ் தென்மண்டல மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட தமாகா தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, வரும் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக மட்டுமல்லாமல், கொரோனா விழிப்புணர்வு நாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதாகவும்,அதன் மூலம் மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் மக்கள் வெளியே வரும்பொழுது கட்டாயம் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வுகள் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து விலைவாசி உயர்வை மத்திய மாநில அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென தமாகா வலியுறுத்தி வருகிறது என்றும்.
    தொடர்ந்து கொரோனா இறப்புச்சான்றிதழ் முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

    தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு பணிகள் தடை ஏற்பட்டுள்ளது. ஆனால் தென் மாவட்டங்களுக்கு பயனுள்ள வகையில் வரக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து விரைவாகக் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

    Also read: மின்இணைப்புகளில் இந்த கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும்: புதிய விதிமுறை அமல்!

    எய்ம்ஸ் மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை போடுவது போல் விரைவாக முடிக்க முடியாது, ஆனால் படிப்படியாக ஆரம்பித்து குறித்த காலத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது என்றார்.

    தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என தமாகா தலைவர் ஜி கே வாசன் கேட்டுக்கொண்டார்.

    செய்தியாளர் - சிவக்குமார் தங்கையா
    Published by:Esakki Raja
    First published: