தவறு செய்யும் வழக்கறிஞர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்: தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்

பார் கவுன்சில் தலைவர்

வழக்கறிஞர் என யார் கூறினாலும் அவரிடம் பார் கவுன்சில் அடையாள அட்டையை கேட்க வேண்டுமென காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளோம். 

 • Share this:
  தவறு செய்யும் வழக்கறிஞர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், கடந்த ஐந்து ஆண்டுகளில் 175 வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் தமிழக அரசு இணைந்து ஜூன் 28ம் தேதி, வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பார் கவுன்சில் வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

  20,000 பேர் இந்த முகாம் மூலம் பயன்பெறுவர் என எதிர்பார்ப்பதாகவும், தொடர்ந்து, மாநிலம் முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் இந்த தடுப்பூசி முகாம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா 1 மற்றும் 2வது அலையில் மட்டும் இதுவரை 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உயிரிழந்துள்ளனர். வழக்கறிஞர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம், நீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணையை கொண்டு வர முடியும். கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

  தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், 175 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை போட்டவர்கள் தான் போலி வழக்கறிஞர்கள். சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் என காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், வழக்கறிஞர் அல்ல.

  Also read: கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?

  வழக்கறிஞர் என யார் கூறினாலும் அவரிடம் பார் கவுன்சில் அடையாள அட்டையை கேட்க வேண்டுமென காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளோம்.

  தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்கவும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வரவும் முதல்வர் பிரதமரை சந்தித்தபோது வலியுறுத்தியதற்கு நன்றி.

  ஏற்கனவே சென்னையில் இருந்த சட்டக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மீண்டும் சட்டக் கல்லூரி அமைக்க முதல்வரை வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: