Home /News /tamil-nadu /

நாம் இந்தியை கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.. அமைச்சர் துரைமுருகன் சொன்ன காரணம்!!

நாம் இந்தியை கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.. அமைச்சர் துரைமுருகன் சொன்ன காரணம்!!

துரைமுருகன்

துரைமுருகன்

Hindi | பெரியார், தியாகராஜர், அண்ணா போன்ற பல பெரிய தலைவர்களாலே தமிழன் என்ற  உணர்வை நாம் அறிந்தோம் என்று தெரிவித்துள்ளார். 

    எனக்கு மட்டும் அதிகாரம்  இருந்தால் தமிழ் அறிஞர்களுக்கு பத்மபூஷன் விருது அளிப்பேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 29ம் ஆண்டு முத்தமிழ் மன்ற இலக்கிய நவரசத் திருவிழா இரண்டு நாட்கள் பல்வேறு தமிழ் இலக்கிய தலைப்புகளில் பல்வேறு அறிஞர்கள், பேச்சாளர்கள் தலைமையில் நடைப்பெற்று வருகிறது.

    இதில் பங்கேற்று பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இலக்கிய வாசம் நிறைந்த ஊர் வாணியம்பாடி, எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் வாணியம்பாடியில் படித்த  கவிகோவிற்கும் பல தமிழ் அறிஞர்களுக்கும் பத்மபூஷன் விருது வழங்கியிருப்பேன்.

    இதையும் படிங்க - டெஸ்க்கை தூக்கி ஆசிரியரை தாக்க வந்த மாணவர் - அதிர்ச்சி வீடியோ

    தமிழனுக்கு மறதி அதிகம். பெரியார், தியாகராஜர், அண்ணா போன்ற பல பெரிய தலைவர்களாலே தமிழன் என்ற  உணர்வை நாம் அறிந்தோம்.  உலகில் எவ்வளவு மொழி தோன்றியும் பழ மொழிகள் செத்து விட்டது, உயிரோடு இருக்கிற மொழி தமிழ் மொழி மட்டுமே. மொழி வளத்தோடு இருக்கிறது தமிழ்.

    டெல்லியில் பெரிய அதிகாரிகள், மற்றும் அமைச்சர்கள் இந்தியில் தான் பேசுகிறார்கள், இதுவரையில் இருந்த சபாநாயகர் ஆங்கிலத்தில் பேசினார் தற்போது உள்ள சபாநாயகர் இந்தியில் பேசுகிறார். இவர்களுக்காகவே நாம் இந்தியை கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். 

    மேலும், நமக்கு மொழி உணர்வு முக்கியம். பைபிளை கூட சில மதவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அரசன் முதல் ஆண்டி வரை ஏற்றுக்கொள்ளப்படும் நூல் திருக்குறள் மட்டுமே என்றார்.

    மேலும் தமிழ் மொழியின் சிறப்பை பற்றி பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக்கூறி, நகைச்சுவை உணர்வுடன் அரங்கை கலகலப்புடன் வைத்திருந்தார் அமைச்சர் துரைமுருகன்.

    இந்த நிகழ்வின் போது மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் வாணியம்பாடி நகர பொறுப்பாளர் சாரதி குமார் மற்றும் தமிழறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: DMK, Duraimurugan, Hindi

    அடுத்த செய்தி