Home /News /tamil-nadu /

Exclusive: எய்ம்ஸ் மருத்துவக் குழு நியாயமாக நடந்துக் கொள்ளும் - அப்போலோ துணைத்தலைவர் ப்ரீதா ரெட்டி

Exclusive: எய்ம்ஸ் மருத்துவக் குழு நியாயமாக நடந்துக் கொள்ளும் - அப்போலோ துணைத்தலைவர் ப்ரீதா ரெட்டி

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை

ஒரு மருத்துவருக்கு தான் மருத்துவரின் சிகிச்சை புரியும். எனவே எய்ம்ஸ் மருத்துவ குழு நாங்கள் வழங்கிய சிகிச்சையை ஆணையத்திடம் தெரிவிக்க உதவியாக இருப்பார்கள்

எய்ம்ஸ் மருத்துவக் குழு நியாயமாக நடந்துக் கொள்ளும் என அப்போலோ மருத்துவக் குழு தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் marafon குழுமத்துடன் இணைந்து 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை நடத்துவதற்கான ஒப்பந்தம்  சென்னையில் இன்று  கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வின் போது நியூஸ்18க்கு அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி அளித்த பேட்டியில் எய்ம்ஸ் மருத்துவக் குழு உறுப்பினர்கள் குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியே.அவர்கள் எங்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள். நியாயமாக இருப்பார்கள் என்றார்.

இதைத் தொடர்ந்து அப்போலோ குழும துணைத்தலைவர் ப்ரீதா ரெட்டி நியூஸ்18க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் "நாங்கள் கடவுள் அல்ல. மருத்துவர்கள். மறைந்த முதல்வருக்கு செய்ய வேண்டிய அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. வெளிநாடுகளிலிருந்தும் நிபுணர்களின் அறிவுரை பெறப்பட்டது.

ஒரு மருத்துவருக்கு தான் மருத்துவரின் சிகிச்சை புரியும். எனவே எய்ம்ஸ் மருத்துவ குழு நாங்கள் வழங்கிய சிகிச்சையை ஆணையத்திடம் தெரிவிக்க உதவியாக இருப்பார்கள் என நினைக்கிறேன். சிறந்த மருத்துவ நிபுணர்களை
எய்ம்ஸ் மருத்துவக்குழுவில் நியமித்துள்ளனர். " என கூறினார்
Published by:Ramprasath H
First published:

Tags: Apollo, Apollo hospital, Jayalalitha

அடுத்த செய்தி