ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாங்கள் பாமகவிற்கு எதிரானவர்கள்.. வன்னியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல.. திருமாவளவன் பேச்சு

நாங்கள் பாமகவிற்கு எதிரானவர்கள்.. வன்னியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல.. திருமாவளவன் பேச்சு

திருமாவளவன்

திருமாவளவன்

பாஜகவின் அரசின் கொள்கை, பேச்சுக்களை எதிர்க்கின்றோம். அதனால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை - திருமாவளவன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Neyveli, India

திமுக கூட்டணியை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது எனவும் நாங்கள் பாஜகவிற்கு எதிரானவர்கள்தான் ஹிந்துகளுக்கு எதிரானவர்கள் இல்லை எனவும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

என்எல்சி நிறுவனத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய சுரங்கங்களுக்கு கூடுதல் நிலத்தைக் கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும், கொடுக்கவிருப்போரும் உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். “வீடு நிலம் கொடுத்தவர்கள் இனி என்எல்சி நிறுவனத்திடம் பங்கு தொகைதான் கேட்கவேண்டும். என்எல்சி நிறுவனம் ஆண்டுக்கு 1000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி வருகிறது. எனவே ஏக்கருக்கு 1 கோடி இழப்பீடு வழங்கினால் என்ன?

இழப்பீடு எங்களுக்கு வேண்டாம் எங்கள் நிலத்தில் இருந்து எவ்வளவு நிலக்கரி எடுக்கபடுகிறதோ அதில் பங்கு தொகை தான் இனி கேட்க வேண்டும். படிப்பு இல்லை என இங்கு உள்ள இளைஞர்களை என்எல்சி புறக்கணிப்பதா? எதுவும் தெரியாது என்று எங்களை புறக்கணிக்கக்கூடாது. உரிய பயிற்ச்சியை கற்றுத்தாருங்கள். வாய் சொன்னால் எங்கள் கை செய்யும். அதற்குரிய பயிற்சி தாருங்கள். Unskilled என்று கூறி வேலையை மறுக்கின்றனர்.

அரசியல் காரணங்களுக்காக அல்ல. கட்சிகளுக்காக அல்ல. விவசாயிகளுக்காக இப்பேரணியை நடத்தினோம். திமுகவும் இந்த 17 கோரிக்கைகளுக்கும் உடன்பட்டவர்கள் தான். திமுக கூட்டணியை எந்தக்கொம்பனாலும் சிதைத்துவிட முடியாது.

பாஜகவின் அரசின் கொள்கை, பேச்சுக்களை எதிர்க்கின்றோம். அதனால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. பாஜகவின் புத்தி சாதியவாத புத்தி, சனாதன புத்தி. அதேபோல் பாமகவின் அரசியலுக்கு எதிரானவர்கள். அதனால் நாங்கள் ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை.

ஒட்டுமொத்த தமிழகத்திலும் வடமாநிலத்தவர்கள் குவிந்து வருகின்றனர். இந்தி பேசும் மக்களை திரட்டுவோம் என மறைமுகமாக சதி போன்று உள்ளது. இதில் சதி உள்ளதாக தோன்றுகிறது” என தெரிவித்தார்.

First published:

Tags: DMK Alliance, NLC, Thirumavalavan, Viduthalai Chiruthaigal Katchi