Home » News » Tamil-nadu » WE AFRAID ONLY FOR PEOPLE SAYS MINISTER SELLUR RAJU SKD

மக்களைப் பார்த்துதான் பயப்படுவோம்: எதிர்கட்சிகளைப் பார்த்து அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ

மக்களைப் பார்த்துதான் பயப்படுவோம். எதிர்கட்சிகளைப் பார்த்து அல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மக்களைப் பார்த்துதான் பயப்படுவோம்: எதிர்கட்சிகளைப் பார்த்து அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜு.
  • Share this:
மதுரை பயணியர் விடுதிகள் அருகே நடந்த அதிமுக  கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 4 ஆம் தேதி மதுரை வருகிறார்.  மதுரை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் லோயர் கேம்பில் இருந்து நேரடியாக குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். வருகிற 4 ஆம் தேதி முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.  அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்க வேண்டும்.   நடிகர் ரஜினி நல்ல முடிவு எடுப்பார்.  அவர் கட்சி ஆரம்பித்தால் அவரது கொள்கை அறிந்த பிறகு தான் கருத்து கூற முடியும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டார். அதான்  இதுபோன்ற தவறான கருத்துகளை கூறுகிறார்.  அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத  உள் ஒதுக்கீட்டில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அனைவரும் பாராட்டுகின்றனர். அதனால் தான் மு.க.ஸ்டாலின் விரக்தியில் பேசுகிறார்.

அதிமுக அரசில் மக்கள் பாதிப்பு இல்லாமல் உள்ளனர். மீண்டும் அதிமுக ஆட்சி தான். கனிமொழியை, உதயநிதியை  பார்க்க கூட்டம் அதிகம் கூடுகிறது என கூறுகிறார்களே? என்ற கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதியே கூறி உள்ளார். கூட்டம் கூடியதை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது. கூட்டம் அனைத்தும் ஓட்டாக மாறாது. கனிமொழி யார்? எத்தனையாவது மகள்? அவர் யார்?  என பார்ப்பதற்கும் தான் கூட்டம் கூடுகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு  கூட்டம் கூடினாலும் கவலை இல்லை. நாங்கள் யாரை பார்த்தும் பயப்பட மாட்டோம்.  மக்களை பார்த்து தான் பயப்படுவோம். எதிர்கட்சிகளை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. மக்களுக்கு தான் பயப்படுவோம்’ என்று தெரிவித்தார்.






உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: November 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading