முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்.. இடைத்தேர்தல் பாஜகவிற்கானது அல்ல” - அண்ணாமலை பேட்டி

“மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்.. இடைத்தேர்தல் பாஜகவிற்கானது அல்ல” - அண்ணாமலை பேட்டி

அண்ணாமலை

அண்ணாமலை

பாஜக தனி நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது. கட்சிகளுடன் தான் கூட்டணி அமைக்கும் - அண்ணாமலை

  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

திரிபுரா, நாகாலாந்தில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிதான் காரணம் எனவும் ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 12வது சுற்று முடிவில் 55,528 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஈவிகேஎஸ் வெற்றி உறுதியான நிலையில், அதிமுக வேட்பாளர் டெப்பாசிட்டை தக்கவைத்தார்.

இதற்கிடையே விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் சாதி சார்ந்த அரசியல் நடைபெற்று வருகிறது. இதனை பாஜக உடைத்து வருகிறது. மூன்று மாநில தேர்தல் முடிவுகளில், திரிபுராவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. திரிபுராவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் காட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளோம்.

நாகாலாந்தில் பாஜக தனித்து போட்டியிட்டது. அங்கு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றிகளுக்கும் காரணம் மோடி. வட கிழக்கு மாநிலங்களுக்கு 52 முறை பயனம் செய்துள்ளார். வட கிழங்கு மாநிலங்களில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்களால் வெற்றி பெற்றுள்ளோம்.

ஈரோடு இடைத்தேர்தலில், மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம். மக்கள் தீர்ப்புக்கு பிறகு மக்களை குறைக்கூறக்கூடாது. 2024 தேர்தலில் பாஜக பதில் சொல்லும். இடைத்தேர்தல் என்பது பாஜகவிற்கானது இல்லை என ஏற்கனவே கூறுவிட்டோம். 2024ஆம் ஆண்டு தேர்தல் களம் வித்தியாசமானது. ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கிறோம்.

திமுகவின் சாதனைக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. இடைத்தேர்தலில் வலிமையான கூட்டணியில் நிற்க வேண்டும். ஆட்சியில் உள்ள கட்சியை எதிர்க்க வலிமை தேவை. 2024ஆம் ஆண்டு வரை வேறு இடைத்தேர்தல் நடக்ககூடாது என வேண்டிக்கொள்கிறேன். பாஜக தனி நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது. கட்சிகளுடன்தான் கூட்டணி அமைக்கும்.

திமுக கூட்டணியிலிருந்து வெளி வரவேண்டுமென்றால் தைரியமாக வரலாம் சாக்கு போக்கு ஏன் திருமாவளவன் கூறுகிறார் என்று தெரியவில்லை. கருத்தியலாக தடா பெரியாசமியிடம் முதலில் திருமாவளவன் உரையாட வேண்டும்” என தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, Erode Bypoll, Erode East Constituency, EVKS Elangovan, Nagaland, Tripura