ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்: இன்று சோதனை ஓட்டம்!

12- ம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்: இன்று சோதனை ஓட்டம்!
தண்ணீர் கொண்டு வரும் ரயில்
  • News18
  • Last Updated: August 24, 2019, 1:00 PM IST
  • Share this:
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு,  ரயில் மூலமாக குடிநீர் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில்,  இன்று காலை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னையில், இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  சென்னை மாநகரத்தின் முக்கிய நீராதாரங்களாக கருதப்படும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் இருப்பும் வெகுவாக குறைந்தது.

சோழவரம் ஏரிசென்னையின் ஒரு நாள் தண்ணீர் தேவை சுமார் 80 கோடி லிட்டர் ஆகும். இந்தநிலையில் ஏரிகள் வறண்டதை அடுத்து, தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக,  குவாரிகளை நோக்கி படையெடுத்த தமிழக அரசு, சிக்கராயபுரம் உள்ளிட்ட கல்குவாரிகளில் இருந்து தினமும் 2 கோடி லிட்டர் நீரை எடுத்து, அதனை பொதுமக்களுக்கு வழங்கி வந்தது.

அதன்பின்னர் எருமையூரில் உள்ள 5 குவாரிகளில் இருந்து தண்ணீரை எடுத்து சென்னை மக்களுக்கு வழங்கியது. மேலும்,  கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம், நெமிலி மற்றும் மீஞ்சூர் ஆலைகளில் இருந்து தினமும் 20 கோடி லிட்டர் அளவுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது

நிலத்தடி நீர், விவசாயக் கிணறுகள், ஏரிகள், குவாரி மற்றும் கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டம் என மொத்தம் 50 கோடி லிட்டர் அளவுக்கு தற்போது மக்களுக்கு தண்ணீர் வினியோக்கிக்கப்பட்டு வருகிறது. எனினும் 30 கோடி லிட்டர் அளவுக்கு இன்றளவும் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.இந்தச் சூழலில்,  வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் உபரி நீரானது,  ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்படும் என கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதும், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

அதன்படி, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கத்திற்கு, ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 65 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் வில்லிவாக்கத்துக்கு கொண்டுவரப்பட்டு அதன்பின்னர், கீழ்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சுத்திகரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

தண்ணீர் கொண்டு வரும் ரயில் பாதை


முதலமைச்சர் அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த 2 வாரங்களாக இரவு, பகல் பாராமல் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.  வேலூர் மாவட்டம் மேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து  ஜோலார்பேட்டை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனைதொடர்ந்து காலை 10 மணிக்கு,  ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு,  ரயில் மூலமாக குடிநீர் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. 12- ம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading