தலைநகர் சென்னையில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்துக் கிடக்கும் நிலை கடந்த ஜூன் மாதம் நிலவியது.
மனிதன் அன்றாடம் உயிர் வாழ முக்கியத் தேவை தண்ணீர். கடந்த ஜூன் மாதம் சென்னையில் நிலவி வந்த கடுமையான தண்ணீர் பஞ்சம் பொதுமக்களின் தினசரி வாழ்கையையே முடக்கிப்போட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டதால், லாரித் தண்ணீரை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் சென்னைவாசிகள்.
சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி, தினமும் ஒரு கோடி லிட்டர் என்ற இலக்குடன் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி இந்த சேவை தொடங்கியது.
சென்னையின் மொத்த தண்ணீர் தேவையில் இந்த திட்டத்தின் மூலம் கிடைத்தது மிக மிக குறைந்த அளவே என்றாலும், தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில்கொண்டு சென்னை மக்கள் இந்த திட்டத்தை வரவேற்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.