தண்ணீர் திருட்டை தடுக்க குழாய்களுக்கு பூட்டுப்போடும் மக்கள்..!

சந்தையில் அதிகளவில் விற்பனையாகி வரும் பூட்டுப் போடும் குழாய்கள் தேனி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

news18
Updated: June 14, 2019, 12:46 PM IST
தண்ணீர் திருட்டை தடுக்க குழாய்களுக்கு பூட்டுப்போடும் மக்கள்..!
குழாய்களுக்கு பூட்டுப் போடும் மக்கள்
news18
Updated: June 14, 2019, 12:46 PM IST
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடால் தண்ணீர் திருட்டை தடுக்க பூட்டுப் போட்டு பாதுகாக்கும் நிலைக்கு தேனி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்திற்கு தேனி மாவட்டம் மட்டும் விதிவிலக்கல்ல.  மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களான முல்லைப் பெரியாறு, வைகை அணைகள் வறண்டு காணப்படுகின்றன.

அத்தியாவசிய தேவையான குடிநீரை விலை கொடுத்து வாங்கும் மக்கள், அதனை பூட்டுப்போட்டு பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீரை பாதுகாக்க குழாய்களுக்கு பூட்டு போடப்படுவதாக கூறுகிறார் அல்லி நகரத்தைச் சேர்ந்த மணிகண்டன்.தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இந்த சமயத்தில் பூட்டுபோடும் குழாய்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர். இந்தவகை குழாய்கள் விரைவில் விற்றுத் தீர்ந்துவிடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் தட்டுப்பாடை போக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்தாலும், பொதுமக்களும் நீரை வீணாக்காமல் இருக்க ஒத்துழைக்க வேண்டுமென கூறுகிறார் தேனியைச் சேர்ந்த சீனிவாசன்.

நீரின்றி அமையாது உலகு என்னும் வள்ளுவர் வாக்கை தற்போது உணர்ந்து, ஆபரணங்களை பூட்டு போட்டு பாதுகாப்பது போல்  தண்ணீரையும் பூட்டுபோட்டு பாதுகாத்துவருகின்றனர்.
Loading...
Also see...

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...