தண்ணீருக்காக இரவு பகல் பாராமல் காலிக்குடங்களுடன் அலையும் மக்கள்...

மழை இல்லாவிட்டாலும், "Save water" என்ற பிரசாரத்தை முன்வைத்து, இன்னும் தீவிரமாக விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் எனக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

news18
Updated: June 12, 2019, 7:49 AM IST
தண்ணீருக்காக இரவு பகல் பாராமல் காலிக்குடங்களுடன் அலையும் மக்கள்...
தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருப்பு
news18
Updated: June 12, 2019, 7:49 AM IST
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், சென்னையில் நள்ளிரவில் காலிக்குடங்களுடன், தண்ணீர் லாரிகளை நோக்கி பொதுமக்கள் படையெடுக்கின்றனர்.

பருவமழை பொய்த்துப் போனதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகள், வறண்டு போய்விட்டன. நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டதால், தலைநகர் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் ஆங்காங்கே குடிநீருக்காகவும் அத்தியாவசிய தேவைக்கான நீருக்காகவும் காலிக்குடங்களுடன் இரவு பகல் பாராமல் அலைந்து திரிகின்றனர்.

அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேனை விலைகொடுத்து வாங்கினாலும், அத்தியாவசிய தேவைக்கும் கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்த முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர்.

மழை இல்லாவிட்டாலும், "Save water" என்ற பிரசாரத்தை முன்வைத்து, இன்னும் தீவிரமாக விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறும் பொதுமக்கள் சிலர், மழைநீர் சேகரிப்பை அனைத்து வீடுகளிலும் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். அத்துடன் போதுமான அளவிற்கு மரங்களை நட வேண்டும் என்றும், தேவையில்லாமல் நீர் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் சப்ளை குறைந்துவிட்டதால், தங்களது வருமானமும் குறைந்துவிட்டதாக, லாரி ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Also watch

First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...