தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்

தண்ணீர் லாரிகள் போராட்டம் காரணமாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
தண்ணீர் லாரிகள் போராட்டம் காரணமாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது
  • News18
  • Last Updated: August 21, 2019, 7:06 AM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், லாரிகள் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுப்பதாகக் கூறி, லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்வதாக தனியார் லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி, தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை இன்று தொடங்கியுள்ளனர்.

தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்வதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தண்ணீர் எடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கும் வரை, தங்களது போராட்டத்தை கைவிட முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


தண்ணீர் லாரிகள் போராட்டம் காரணமாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Also watch

First published: August 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்