65-வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

news18
Updated: August 13, 2019, 7:07 AM IST
65-வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்
மேட்டூர் அணை
news18
Updated: August 13, 2019, 7:07 AM IST
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 65 -வது முறையாக 100 அடியை எட்டியது.

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதையடுத்து அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது . தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.

நேற்று இரவு 8.00 மணியின் போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,35,000 கன அடியிலிருந்து 2,40,000


கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 92.55 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 55.61 டி.எம்.சியாகவும் இருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேட்டூர் அணையின் நீர் மட்டம் 65 -வது முறையாக 100 அடியை எட்டியது. இன்று காலை 6.00 மணிக்கு அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2,40,000 கன அடியிலிருந்து 2,30,000 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 100.30 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 64.87 டி.எம்.சியாகவும் இருந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.

Loading...

Also watch

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...