ஒகேனக்கலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு சீறிப்பாயும் காவிரி ஆறு!

பொங்கி வரும் காவிரியால் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கே 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக சுற்றிப் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: August 13, 2019, 9:28 AM IST
ஒகேனக்கலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு சீறிப்பாயும் காவிரி ஆறு!
பொங்கி வரும் காவிரியால் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கே 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக சுற்றிப் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Web Desk | news18
Updated: August 13, 2019, 9:28 AM IST
ஒகேனக்கலில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காவிரியில் வெள்ளம் சீறிப் பாய்ந்து வரும் நிலையில், கர்நாடகா - தமிழகம் இடையே போக்குவரத்து முடங்கியுள்ளது.

தொங்குப் பாலத்தையும் மூழ்கடித்து சென்ற வெள்ளம்

ஒகேனக்கலைப் இப்போது பார்த்தால் நடந்தாய் வாழி காவிரி என பாடுவதற்கு பதிலாக ஓடி வருகிறாயே காவிரி என்றுதான் பாடத் தோன்றும். அங்கு காலையில் 2 லட்சத்து 10,000 கனஅடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து ஒருகட்டத்தில் 2 லட்சத்து 80,000 கனஅடியாக உயர்ந்தது.


ஏற்கெனவே அருவிகளே தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் அருவிகளை பார்க்க சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட தொங்குபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சீறிப் பாய்ந்தது.

வீடுகளுக்குள் புகுந்த காவிரி வெள்ளம்

தடுப்புகளை அடித்துச் சென்றதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு சமையல் செய்து தர அமைக்கப்பட்ட கடைகளையும் வெள்ளம் வாரிச் சுருட்டி ஓடியது.

Loading...

இதனால் காவிரிக் கரையோரம் உள்ள ஊத்தமலை, நாடார்கோட்டை பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீட்டில் இருந்து பொருட்களை மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்ற பொதுமக்கள் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியும் அங்கிருந்து வெளியேறாமல் கோயில் உள்ளிட்ட இடங்களில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்குவது தொடர்பாக வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தினர்.

தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து முடக்கம்

காவிரிக்கரையோரம் ஒகேனக்கல் அஞ்செட்டி சாலையில் 6 இடங்களில் வெள்ள நீர் ஏறி வந்தது. அதனால் கர்நாடகா தமிழகம் இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சாலையை வெள்ளம் மூழ்கடித்த சில இடங்களில் வனப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் பொதுமக்கள் சென்றனர். அஞ்செட்டி, கேரெட்டி, பிலிகுண்டுலு, ஓசூர் உள்ளிட்ட ஊருக்கான சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அப்பகுதிக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் 100 கிலோ மீட்டர் சுற்றிப் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

Also see...  மணந்தவரை கொலை செய்ய மனம் வந்தது எப்படி?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...