சிவகங்கை அருகே தண்ணீருக்காக தவிக்கும் கிராமம்... கிடைக்கும் தண்ணீரால் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு...!

ஒக்கப்பட்டி கிராமம்

சிவகங்கை அருகே தண்ணீர் இல்லாமல் 10 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளை வளர்க்க முடியாமலும் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 • Share this:
  சிவகங்கை அருகே தண்ணீர் இல்லாமல் 10 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளை வளர்க்க முடியாமலும் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

  வறண்டுபோன கண்மாய்கள், ஆழ்துளைக் கிணற்றில் உப்புத் தண்ணீர், நீருக்காக அலையும் கால்நடைகள் என சிவகங்கை அருகே உள்ள ஒக்குபட்டி கிராமம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

  10 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால், விவசாயம் செய்ய முடியாத நிலை இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், கிடைக்கும் நீரும் உப்புத் தண்ணீராக இருப்பதால் 30க்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடுகளைக் கூட வளர்க்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  விவசாயத்தை மக்கள் மறந்துபோன நிலையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடம் 2 ரூபாய்க்கு ஊராட்சி வழங்கி வருகிறது. இந்தப் பிரச்னையைப் போக்க கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

  பெரிய ஒக்குபட்டி, மாணிக்கம்பட்டி, தேவன்பெருமாள் பட்டி, கண்மாய்பட்டி ஆகிய 4 கிராமங்களிலும் தண்ணீர் பிரச்னை நிலவிவருகிறது. விவசாயிகளின் துயரைத் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

  Also see:
  Published by:Rizwan
  First published: