நெல்லையில் தாமிரபரணி ஆற்று நீர் செந்நிறமாக மாறியதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய தேவைக்கும் குடிநீர் ஆதாரமாகவும் தாமிரபரணி ஆறு விளங்குகிறது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணையிலிருந்து தாமிரபரணிக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போது தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் செந்நிறமாக உள்ளது.
சுத்திகரிக்கப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீரின் நிறமும் அவ்வாறே உள்ளது. நான்கைந்து நாட்களுக்கு மேலாக இதே நிலை நீடிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது பாபநாசம் சேர்வலாறு அணைகள் குகை பாதை மூலம் இயற்கையாகவே இணைந்துள்ளது.
வழக்கமாக சேர்வலாறு அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர், ஆற்றில் விடப்படும். தற்போது தண்ணீரின் அளவு குகைக்கு கீழே சென்றுவிட்டதால் நேரடியாக பாபநாசம் அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால் அணையின் நீர் மட்டம் 38 அடியாக குறைந்து உள்ளதாலும் 8 சதவீத நீரே இருப்பு உள்ளதாலும் கலங்கலான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த இரு நாட்களில் தண்ணீர் தெளிந்து விடும். இதனிடையே சுற்றுச்சூழல் அதிகாரிகள் பாபநாசம் கீழ் அணைப்பகுதியில் தண்ணீர் மாதிரி எடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். எனினும் இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.