தொடரும் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

இதுவரை மூடப்பட்ட குடிநீர் ஆலைகள் குறித்து தமிழக அரசு சார்பில் விரிவான விளக்கம் இன்று அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
கோப்புப் படம்
  • Share this:
கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் 6-ஆவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட கோரும் வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்து கேன்களை அடைத்து விற்கும் ஆலைகளை இன்றைக்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், நாகை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் ஆலைகளை மூடி மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நடவடிக்கைகளை கண்டித்தும் அனைத்து ஆலைகளுக்கும் அனுமதி வழங்கக் கோரியும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனால் குடிநீர் கேனை மட்டுமே பெரிதும் நம்பியுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். சென்னையில் பல இடங்களில் எந்த தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமாவது திறந்திருக்குமா என தள்ளு வண்டிகள், லோடு ஆட்டோக்களில் காலி கேன்களோடு மக்கள் அலைந்து திரிகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு குடிக்கக் கூட தண்ணீர் கொடுக்க முடியவில்லை என ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

கேன் குடிநீர் சில இடங்களில் 100 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்பட்டாலும், உச்சக்கட்ட தட்டுப்பாடு என்ற நிலை இன்னும் ஏற்படவில்லை. நீதிமன்றத்தை நாடியுள்ள உற்பத்தியாளர்களின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதை அறிய பொதுமக்கள் தவிப்புடன் உள்ளனர்.

சிலர் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கேன்களில் அடைத்து விற்பதாக கூறும் தரமணி பகுதி மக்கள், சமைப்பதற்கு தண்ணீர் இல்லாததால் ஹோட்டல்களில் சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்கேன் குடிநீர் உற்பத்தியாளர்களில் சிலர் சுத்திகரிக்காத தண்ணீரை விநியோகிப்பதாகக் கூறும் சில்லறை விற்பனையாளர் கார்த்திக், முன்பை விட அதிக கேன்கள் விற்பனையாவதாக தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட கோரும் வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் அளித்த கெடு இன்று நிறைவடைவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அனுமதியற்ற குடிநீர் ஆலைகளை மூட ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி இன்றுக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் இல்லாவிட்டால் தலைமைச் செயலாளர் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதுவரை மூடப்பட்ட ஆலைகள் குறித்து தமிழக அரசு சார்பில் விரிவான விளக்கம் இன்று அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading