கேன் குடிநீர் ஆலைகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களிலும் உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர்.
திருவண்ணாமலையில் கேன் குடிநீர் ஆலைகளைச் சேர்ந்த 6,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து குடிநீர் விற்பனையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சில தினங்களில் கிரிவலம் தொடங்கவுள்ளதால் வெளியூர் பக்தர்களுக்காக தண்ணீர் தேவை அதிகரிக்கும் என்றும் ஆலைகளுக்கு விரைந்து அனுமதி அளிக்கவும் கோரினர்.
இதே போல, புதுக்கோட்டை, நாகை மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்களும் அந்தந்த மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். அதிகாரிகள் ஆலைகளுக்கு சீல் வைத்துவருவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் உற்பத்தியாளர்கள், குடிநீர் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்த வேண்டுமென கோரினர்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.