Home /News /tamil-nadu /

புத்தாண்டு முதல் கேன் வாட்டர் விலை உயரப் போகிறது.. குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு

பெட்டி ஒன்றுக்குத்தான் ரூ. 10 வரை உயர்த்தப்படும் என்று உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதைப் பார்த்து விட்டு, வர்த்தகர்கள் கேனுக்கு விலை உயர்த்தி, பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தி விடக் கூடாது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கேன் வாட்டர் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி தரும் தகவலை குடிநீர் உற்பத்தியாளர்கள் அளித்துள்ளனர்.

    புத்தாண்டு முதல் வாட்டர் கேன்களின் விலை குறிப்பிட்ட சில இடங்களில் உயரவுள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸை சேர்ந்த குடிநீர் உற்பத்தியாளர்கள் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க : ராமேஸ்வரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்.. வசூல் வேட்டையில் விடுதிகள்

    அதில், அடைக்கப்பட்ட குடிநீர் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வால், 300 மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர், 2 லிட்டர் மற்றும் 5 லிட்டர் பாக்ஸ்களின் மீது புத்தாண்டு முதல் ரூ. 10 உயர்த்தப்படும் என்றும், 20 லிட்டர் கேன் ஃபில்லிங் மீது ரூ. 2-ம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன்பதிவு விவசாயிகள் கண்டனம்

    பெட்டி ஒன்றுக்குத்தான் ரூ. 10 வரை உயர்த்தப்படும் என்று உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதைப் பார்த்து விட்டு, வர்த்தகர்கள் கேனுக்கு விலை உயர்த்தி, பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தி விடக் கூடாது.

    இதையும் படிங்க : அதிகாலையில் கேட்ட சத்தம்.. பெரம்பலூரில் சிக்கிய ஆந்திர திருடன்

    பெரு நகரங்களில் வாட்டர் கேன் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையை எட்டியுள்ளது. வர்த்தகம் ஆகிவிட்ட வாட்டர் கேன் தொழிலில் இன்றைக்கு ஏராளமானோர் இறங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு சுகாதாரமான இலவச குடிநீர் வழங்கும் பொறுப்புள்ள அரசு, குறைந்த விலையிலாவது அதனை கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.
    Published by:Musthak
    First published:

    Tags: Can Water

    அடுத்த செய்தி