Home /News /tamil-nadu /

கேன் குடிநீர் விலை ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்வு - உற்பத்தியாளர் அறிவிப்பு

கேன் குடிநீர் விலை ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்வு - உற்பத்தியாளர் அறிவிப்பு

கேன் குடிநீர்

கேன் குடிநீர்

20 லிட்டர் கேன் குடிநீரை கட்டணம் நிரப்ப 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் கேன் குடிநீர் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் விலைவாசி உயர்வு ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழகத்தின் கேன் குடிநீர் விலை உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கேன் குடிநீர் பாட்டில் குடிநீர் ஆகியவற்றின் விலைகளை ஏற்ற குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. 20 லிட்டர் கேன் குடிநீர் நிரப்ப 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. ஒரு லிட்டர், அரை லிட்டர், இரண்டு லிட்டர், 5 லிட்டர் ஆகிய குடிநீர் பாட்டில்களில் பாக்ஸ் களுக்கு 10 ரூபாய் விலை உயர்த்தப்படுகிறது.

    இந்த விலை உயர்வு வருகிற ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என திருவள்ளூர் மாவட்டம் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை புறநகரில் உள்ள 400க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் 300 மில்லி லிட்டர், 500 மில்லி லிட்டர், ஒரு லிட்டர், இரண்டு லிட்டர், 5 லிட்டர் ஆகிய பாட்டில்கள் அடங்கிய  பெட்டிகளின் விலையில் கூடுதலாக 10 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    20 லிட்டர் கேன் குடிநீரை கட்டணம் நிரப்ப 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் கேன் குடிநீர் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: "ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை:" 6623 குற்றவாளிகள் கைது; ரூ.29 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்


    செங்குன்றம், புழல், அலமாதி, காரனோடை ,பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ,மணவாள நகர் ,திருவள்ளூர், சிறு வானூர், கண்டிகை, பள்ளிப்பட்டு, திருத்தணி, மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், மணலி, சுற்றுவட்டாரங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவை ,தொழில் நிறுவனங்கள், ஓட்டல்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    மேலும் படிங்க: நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன்பதிவு விவசாயிகள் கண்டனம்


    அது மட்டுமின்றி தனியார் விடுதிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தேவையான குடிநீரையும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கேசென்னை மற்றும் புறநகர் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி பெரும்பாலான பொதுமக்கள் கேன் குடிநீரை வாங்கி பருகுவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளிலும் கேன் குடிநீர் இன் பயன்பாடு அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மூலப்பொருள் ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை வைத்து கேன் குடிநீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

     

    செய்தியாளர்: பார்த்தசாரதி
    Published by:Murugesh M
    First published:

    Tags: Tamilnadu, Water bottle

    அடுத்த செய்தி