மதுரை: புதிதாகக் கட்டப்பட்டு வந்த வீட்டின் படிக்கட்டு சரிந்து விழுந்ததில் காவலாளி பரிதாப மரணம்..

மதுரை: புதிதாகக் கட்டப்பட்டு வந்த வீட்டின் படிக்கட்டு சரிந்து விழுந்ததில் காவலாளி பரிதாப மரணம்..

படிக்கட்டு சரிந்து காவலாளி சாவு

மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த வீட்டின் படிக்கட்டு சரிந்து விழுந்ததில் காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

  • Share this:
மதுரையில் திருச்சியைச் சேர்ந்த மகாலட்சுமி, அழகர்கோயில் சாலை அப்பன் திருப்பதி பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். சரவணன் என்பவர் ஒப்பந்தக்காரராக கட்டடப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இங்கு சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகேயுள்ள பட்டமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் (52) என்பவர் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.

இவர் நேற்று இரவு வீட்டின் மேல் பகுதிக்குச் செல்லும் படிக்கட்டின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென படிக்கட்டு சரிந்து விழுந்தது. கணேசன் இடிபாடுகளில் பரிதாபமாக சிக்கிக்கொண்டார். இதைப்பார்த்த பொதுமக்கள் 108 வாகனத்திற்கும் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். மீட்கும் முயற்சியில் தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

Also read: 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தில் கைதுகணேசன் ஏற்கனவே இறந்துவிட்டார் என 108 மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, கணேசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Published by:Rizwan
First published: