வண்ணாரபேட்டை - விம்கோ மெட்ரோ சேவையில் முதல் நாளிலேயே பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள்

வண்ணாரபேட்டை - விம்கோ மெட்ரோ சேவையில் முதல் நாளிலேயே பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள்

சென்னை மெட்ரோ ரயில்

Chennai Metro Train | தியாகராயநகர் பகுதியில் மெட்ரோ ரயில் கதவைத் திறக்க முடியாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

 • Share this:
  சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான மெட்ரோ சேவையின் முதல் நாளிலேயே பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.

  வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இன்று முதல் கட்டண சேவைகள் தொடங்கிய நிலையில், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்திரத்தில் குறைபாடு ஏற்பட்டது.

  இதனால் கைகளால் எழுதப்பட்ட டிக்கெட்டுகள், பயணிகளுக்கு வழங்கப்பட்டன. தியாகராயநகர் பகுதியில் மெட்ரோ ரயில் கதவைத் திறக்க முடியாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் பல இடங்களிலும் தானியங்கி வசதிகள் முறையாக இயங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

  இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கு 70 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: