CAA போராட்டத்தின் நினைவாக பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய தம்பதி!

CAA போராட்டத்தின் நினைவாக பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய தம்பதி!
வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டக் களம்
  • Share this:
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

சென்னையின் 'Shaheen Bagh' என்று அழைக்கப்படும் வண்ணாரப்பேட்டையில் நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தைகளுடன் இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் இப்போராட்டம் 17-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தில் சென்னை பாரதி நகர், குறுக்குபேட்டை பகுதியை சேர்ந்த சதாம் உதீன் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி நசீமாவிற்கு நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்து உள்ளது.


இதுகுறித்து சதாம் உதீன் கூறுகையில், "சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தின்  ஷாஹின்பாக் என்பதன் நினைவாக தன்னுடைய பெண் குழந்தைக்கு ஷாஹினா என பெயர் சூட்டி உள்ளதாகவும், பிரசவத்திற்கு முன் தன் மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் இருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், தன் மனைவி, குழந்தை நலமுடன் திரும்ப ஒன்றாக தொழுகை செய்தனர் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக இப்போராட்டக்களத்தில் ஒரு தம்பதிக்கு திருமணம் மற்றும் இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு ஆகிய நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக ரஜினி கூறினார்...! இஸ்லாமிய மதகுருக்கள் பேட்டி
First published: March 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading