முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Pegasus : பெகாசஸ் மென்பொருள் மூலம் சீமான் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதா?

Pegasus : பெகாசஸ் மென்பொருள் மூலம் சீமான் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதா?

சீமான்

சீமான்

பெகாசஸ் மூலம் தமிழகத்தில் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவோரின் பட்டியல்

  • Last Updated :

பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவோரின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சீமான் உள்ளிட்ட சிலரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2019ஆம் ஆண்டு பயன்படுத்திய செல்போன் எண் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதா கூறப்படும் பட்டியலில் உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீமான், தான் கண்காணிக்கப்பட்டது முன்பே தெரியும் என்றும், அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியின் பெயரும் இடம்பிடித்துள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கே.ராமகிருஷ்ணனும் வேவு பார்க்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எமர்ஜென்சி காலத்தில் அரசாங்கம் மக்களிடம் கூறி விட்டு அவர்களை கண்காணித்த நிலையில் இது எமர்ஜென்சியை விட மோசமான காலம் என ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழக பொருளாளர் குமரேசனின் செல்போன் எண்ணும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் வேவு பார்க்க அறிவுறுத்தப்பட்ட 50 ஆயிரம் தொலைபேசி எண்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதேநேரம் இந்த எண்கள் அனைத்துமே ஒட்டுக்கேட்கப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:

இந்நிலையில், பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்.எஸ்.ஓ. (NSO) நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளர் யார் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் 300 பேர் கண்காணிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர், மூத்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 10 பேரின் தொலைபேசிகளில் பெகாசஸ் ஊடுருவியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, தி ஹிந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், அந்த குழுமத்தின் தலைவருமான என். ராம் மற்றும் ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் கல்லூரியின் தலைவர் ஷஷி குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், பெகாசஸ் ஸ்பைவேரை பெற, இந்திய அரசோ அல்லது அதை பயன்படுத்திய முகமைகளோ உரிமை பெற்றனவா என விசாரணை நடத்த உத்தரவிட கோரியுள்ளனர். ராணுவத்திற்கு இணையான தொழில் நுட்பத்தை கொண்ட ஸ்பைவேரை கொண்டு கண்காணிப்பது, மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவது என்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது நடத்தும் தாக்குதல் என்றும் கூறப்பட்டுள்ளது.

Must Read :  Pegasus | செல்போனை ஒட்டுக்கேட்டு ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு

top videos

    பெகாசஸ் போன்ற கருவிகைளை பயன்படுத்தி கண்காணிப்பது தொலைத்தொடர்பு, அறிவுசார்ந்த தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மீதான நேரடி தாக்குதல் என்றும் கூறப்பட்டுள்ளது. இது போன்ற கண்காணிப்புகள் தொடர்ந்து நடைபெற்றால் தனி மனித பேச்சு உரிமை பாதிக்கப்படும் என்றும் பத்திரிகையாளர்கள் மீதான தொடர் கண்காணிப்பு, பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்துரிமை மீதான தாக்குதல் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்புக்காக மட்டுமே உளவு பார்க்க வேண்டும் என்ற இந்திய அரசின் விதியும் பெகாசஸ் மூலம் மீறப்பட்டுள்ளதாகவும் என். ராம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Naam Tamilar katchi, Phone audio, Phone call, Seeman