நினைவிடத்தில் ஜெயலலிதாவுடன் பேச சிறப்பு ஏற்பாடு!

நினைவிடத்தில் ஜெயலலிதாவுடன் பேச சிறப்பு ஏற்பாடு!

ஜெயலலிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் பீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்டமாக சென்னை  மெரீனா கடற்கரையில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 79 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தை ஜனவரி 27ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

  • Share this:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணி, கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. 80 கோடி ரூபாய் மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் அதன் அருகே 12 கோடி ரூபாய் செலவில் அம்மா அரங்கம், மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கங்கம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் திறந்து வைத்தார்.

குறிப்பாக அம்மா அருங்காட்சியகம் உள்ளே ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் புகைப்படம் மற்றும் சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில் ஜெயலலிதா நினைவிடம் வரக்கூடிய மக்கள் ஜெயலலிதாவிடம் நேரடியாக பேச கூடிய வகையில் தொழில்நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மா அருங்காட்சியகம் உள்ளே சென்றால் அதற்கென தனியாக ஒரு அரங்கம் உள்ளது. அதில் உள்ள பொத்தானை அழுத்தினால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஜெயலலிதா உங்களுடன் நேரடியாக பேசுவது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி ஜெயலலிதா நினைவிடம் பார்க்க விரும்பும் மக்கள் அவருடன் பேசவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

ஜெயலலிதாவிடம் நேரடியாக பேச கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலை


மேலும் படிக்க...திருப்புமுனை: ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக்கி அழகு பார்த்த எம்ஜிஆர்

இது மட்டுமின்றி ஜெயலலிதாவின் மெழுகு சிலை, வாழ்க்கை வரலாறு, குழந்தை முதல் இறக்கும் முன் உள்ள புகைப்படம்,
ஜெயலலிதா சாதனைகள், அவர் கொண்டுவந்த திட்டங்கள் என அனைத்தையும் ஜெயலலிதா நினைவிடத்தில் காண முடியும்.  அதேபோல் அறிவுசார் பூங்கா உள்ளே ஜெயலலிதா உடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். மேலும் சைக்கிள் பயணம் செய்துகொண்டே ஜெயலலிதா திட்டம் பற்றி தெரிந்து கொள்வது, டிஜிட்டல் முறையில் மலர் அஞ்சலி என பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: