திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த ஆசைப்படுவதாக என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி திட்டமான தலைவா திட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அதில் பேசிய அவர், “தொண்டர்கள் சித்தாந்தங்களை பின்பற்றி மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாட வேண்டும். எனக்கு எதிர் சித்தாந்தம் கொண்டவர்களுடன் பழக ஆசை உண்டு. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த ஆசைப்படுகிறேன்.
எதிர்தரப்பு கொள்கை கொண்டவர்களுடன் பழகும்போதுதான் நம் மனம் திறக்கும், நானும் அப்படிப்பட்டவர்களுடன் பழகினேன். அப்போது எனக்குள் ஒரு கண் திறந்தது. யாருடன் பேச வேண்டும் என மிகப்பெரிய பட்டியல் வைத்திருக்கிறேன். அதில் ஒருவர் திக தலைவர் கி.வீரமணி” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் பாஜக தலைவராக பொறுப்பேற்பதற்கு முன் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்திக்க விரும்புவதாக தன் கட்சியினரிடம் கூறியதாகவும் அதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
பாஜக தலைவர் கம்யூனிஸ்டு கட்சி தலைவரை சந்திக்கலாமா என பலரும் தயங்கிய நிலையில் தான் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாக தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Dravidar Kazhagam, K.Veeramani